இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) மற்றும் அவுஸ்திரேலியாவின் சந்தை அபிவிருத்தி வசதி (Market Development Facility - MDF) ஆகியவை இணைந்து ஆசியாவின் முதன்மையான சுற்றுலாத் தலமாக இலங்கையின் நிலையை நிலைபெறச் செய்வதற்கு ஆய்வு வழிகாட்டியை உருவாக்குவதற்கு இணைந்துள்ளன. இத்திட்டமானது இலங்கைக்கு வருகை தருவோரை நன்கு புரிந்துகொள்ளவும், சுற்றுலாத்துறையில் சான்றுகள் அடிப்படையிலான முடிவுகளை எடுக்கவும் மற்றும் முதலீடு செய்யவும் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு உதவும். ளுடுவுனுயு இன் தரவு சேகரிப்பு முயற்சிகளின் செயல்திறனையும், அவற்றின் பயன்பாட்டையும் மதிப்பீடு செய்வதற்கான ஒரு முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இலங்கையின் சுற்றுலா மூலோபாயத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு இணங்க, இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலோபாய திசையை மேம்படுத்த சிறந்த தரமான தரவு மற்றும் ஆய்வின் அவசியத்தை SLTDA அடையாளம் கண்டுள்ளது.
“இலங்கையை உலகளாவிய அளவில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் பல்வேறு வகையான சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா சேவைகள் மற்றும் தயாரிப்புகளை அடையாளம் காண்பதே SLTDA இன் குறிக்கோள்" என்று இலங்கை சுற்றுலாத் தலைவர் கிமாலி பெர்னாண்டோ குறிப்பிட்டார். “சுற்றுலா தொடர்பான தரவுகளை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் வெளியிடுவதற்கான முதன்மை நிறுவனம் என்ற வகையில், புதிய முதலீடுகள், விளம்பரங்கள் மற்றும் கொள்கைக்கான வாய்ப்புகளை அடையாளம் காண SLTDA இன் ஆய்வுத் திறன்கள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதே எமது குறிக்கோள்." என மேலும் அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முதன்மை தனியார் துறை மேம்பாட்டுத் திட்டமான MDF வழங்கிய ஆதரவின் மூலம், ஒரு சர்வதேச ஆலோசனை நிறுவனம் SLTDA உடன் நெருக்கமாக இணைந்து தற்போதைய ஆய்வுக் கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகளை ஆராய்ந்து, இடைவெளி பகுப்பாய்வை நடத்தும். இதன் அடிப்படையில், சுற்றுலா தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஐந்து ஆண்டு திட்டம் உருவாக்கப்படும். உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலாத் தலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு இலங்கை சுற்றுலாத் திறனை கொண்டு வரும், அடுத்த ஐந்து வருடங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகளை இந்த திட்டமானது அடையாளம் காட்டுகிறது.
இந்த ஆய்வில் அவுஸ்திரேலியாவின் ஈடுபாடானது, அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு, Swisscontact உடன் இணைந்து Palladium இனால் மேற்கொள்ளப்படும் MDF ஊடாக இலங்கை சுற்றுலாத்துறைக்கு அது வழங்கும் பரந்த உதவியின் ஒரு பகுதியாகும். கடந்த காலங்களில், Tourism Research Australia (TRA) உடன் SLTDA ஊழியர்களுக்கான ஒரு கற்கைச் சுற்றுலாவை ஏற்பாடு செய்வதன் மூலம், SLTDA வின் ஆய்வுத் திறனை அதிகரிப்பதற்கு, SLTDA வுக்கு அவுஸ்திரேலிய உதவியது.
“தரவு மற்றும் ஆய்வைப் பயன்படுத்துவதன் மூலம், ஊக்குவிப்பு மற்றும் முதலீடுகள் பற்றிய முடிவுகள் சான்றுகளின் அடிப்படையில் அமையலாம் மற்றும் முதலீட்டின் மூலமான வருமானம் மற்றும் சந்தைப்படுத்தலைக் கண்காணிக்கவும், அளவிடவும் முடியும். இதனால் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு அதிக மதிப்பு வழங்கப்படுகிறது" என்று MDF Sri Lanka நாட்டின் பணிப்பாளர் மொமினா சகிப் தெரிவித்தார்.
ஐந்தாண்டு ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இலங்கை சுற்றுலா மற்றும் சுற்றுலாத்துறை மூலோபாய ரீதியாக தரவு உந்துதல், தகவலறிந்த முடிவெடுப்பதன் மூலம் பயனடையும். இது இலக்குமயப்பட்ட சந்தைப்படுத்தலுக்கு உதவும் அதேவேளை வளங்களுக்கும், முதலீடுகளுக்கும் முதலீட்டின் அப்படையான உயர்ந்த வருமானத்தை இயலுமாக்கும். மேலும், இந்த முயற்சியானது தேசிய சுற்றுலா அமைப்பும், தொழில் பங்குதாரர்களும் உலகளாவிய பயண மற்றும் சுற்றுலாத் துறையின் புதிய இயல்பை திறம்படத் தழுவ உதவும்.