Chatbot Icon
...

சுற்றுலா செய்திகள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கதானை போலகல மிதக்கும் விவசாய உல்லாசப்போக்கிடத்தை அங்கீகரிக்கின்றது- ஓர் நூதன விவசாயச் சுற்றுலாக் கோட்பாடு

March 23, 2021

நீர்கொழும்பு சுற்றுலா மையத்திற்கு அருகில் அமைந்துள்ள கதானை போலகல மிதக்கும் விவசாய உல்லாசப்போக்கிடம் தனித்துவ அனுபவத்தை பெறும் நோக்கில் இலங்கை வரும் உல்லாசப்பயணிகளுக்கான புது இணைப்பாகும். 10 GPS கண்காணிப்பான் பொருத்தப்பட்ட, ஏரியின் இரம்மியமான காட்சிகளை கண்டுகளிக்கும் வகையிலமைந்த சுதந்திரமாக நகரும், உல்லாசப்பிரயாணிகளுக்கு பிரத்தியேக அனுபவதை வழங்க 50 மிதக்கும் குடிசைகள், , மிதக்கும் நீச்சல்க்குளம், மிதக்கும் உணவகம், பிரதான உணவகம், பொதுவிடுதி மற்றும் கரோகே ஓய்விடம், நீருக்கடியிலான ஸ்பா, உடற்பயிற்சிக்கூடம் என்பன இத்திட்டத்தின் பிரதான கூறுகளாகும்.

இத்துடன், நீர் விளையாட்டுகள், இயற்கை பச்சை வீடுகள், மிதிவண்டி மற்றும் மெதுவோட்டத் தடங்கள், மீன்பிடி அனுபவம், டென்னிஸ் அரங்கு, மின் கார், போன்ற பல்தரப்பட்ட அனுபவக் கலவைகள் உல்லாசப்பிரயாணிகளுக்கு வழங்கப்படுகின்றன. இத்துணிகர முயற்சி உல்லாசப்பிரயாணிகளுக்கு இலங்கை விவசாய கையனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. நீர்கொழும்புப் பகுதியில் முதன்முதலாக செயற்படுத்தப்படும் இயற்கை விவசாயத்திட்டமிதுவாகும்

"நிலைபேறான, சூழல் நட்புறவுடன் கூடிய இவையே சுற்றுலாத்துறையின் எதிர் காலமாய் அமையும், அதுவும் விஷேடமாக கோவிடின் பிறகு. நாம் இத்துறை புது, ஆக்கப்பூர்வமான மற்றும் தனித்துவமான அனுபவங்களோடு நகர்வதை எதிர்ப்பார்க்கின்றோம்" என இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் கிமார்லி பெர்னான்டோ பகிர்ந்து கொண்டார். அவர் மேலும், சுற்றுத்துறையின் எதிர்கால நலனை எண்ணி இத்திட்டத்தின் பெறுமதியை உணர்ந்து ஒப்புதல் வழங்கிய சகல அரசாங்க நிறுவனங்களுக்கும் தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இத்திட்டத்தை முன்வைத்த திரு.

கெலும் பெரேரா மழை நீர் நிறைந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட களிமண் அகழ்வுகளை பிரயோசனப் படுத்தத்தக்க திட்டமாக மாற்றும் தம் கனவை உணர்ந்து செயற்பட்டவர். நன்காழமாக தோண்டப்பட்டு பிரயோசனப் படுத்த முடியாத நிலையில் கிடந்த களிமண் அகழப்பட்ட நிலங்களில், 13 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழலமைப்பின் இயற்கைத் தன்மை மற்றும் அழகை மீட்க அவற்றை விவசாய மற்றும் மீன்வளர்ப்பு உல்லாச ரெஸார்ட்டாக மாற்றும் திட்டத்தை துவங்கியவர் இவர்/p>

இத்திட்டமானது இரு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும். 1ஆம் கட்டத்தில், 3 அடுக்கு அறைகளும், 27 சொகுசைறகளும், 3 GPS நகருமறைகளும், ஒரு நீச்சல்த்தடாகம், ஒரு உணவகமென்பனவும், 2ஆம் கட்டத்தில் மிகுதியாகவுள்ள நீருக்கடியிலமைந்த ஸ்பா கொண்ட குடிசைகளும், ஏனைய செயற்ப்பாடுகள் கொண்ட கூறுகளும் அமைக்கப்படும். இத்திட்டத்தில் விசேட அம்சமாக உள்ளடக்கப்பட்டுள்ள முற்றிலுமாய் நீருக்கடியிலமைந்த ஸ்பா 4 ஸ்பா அறைகளைக் கொண்டுள்ளதோடு, ஒவ்வொன்றும் 4"*6" கண்ணாடிகளுடன், ஸ்பா சலுகைகளை அனுபவித்தபடியே நீர்க்கடி மீன்வளர்ப்பை ரசிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

இத்திட்டத்தின் நோக்கம், உல்லாசப்பயணிகளுக்கு, விசேடமாக ஐரோப்பிய உல்லாசப்பயணிகளுக்கு ஓர் இரவுக்கு US $ 400 க்கு மேல் எனும் கட்டணத்தில், முதற்தர அனுபவங்களை வழங்குவதாகும். ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இத்தாலி நாடுகளைச் சேர்ந்த சர்வதேச சுற்றுலா வழிகாட்டல் பிரதிநிதிகள், தம் வாடிக்கையாளர் மத்தியில் விளம்பரப்படுத்தும் நோக்கில் தரப்பரிசீலனை செய்யும் நோக்கில் தளத்திற்கு ஏற்கனவே விஜயம் செய்துள்ளனர்.

மத்திய கிழக்கும் நமது எதிர்கால இலக்காகும். 1ஆம் கட்டப்பணிகள், ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் 2021 ஜூன் மாதத்தில் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதோடு இது கோவிடுக்குப் பின் வரும் சுற்றுலா வரவேற்பிற்கு கச்சிதமானதாய் அமையுமென்பதிலும் ஐயமில்லை.